முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேசிய ரீதியில் சாதனை படைத்த பேத்தாழை பொது நூலகம்

வருடத்தில் (2024) மிகவும் சிறப்பாக செயற்பட்ட நூலகங்களுக்கான விருது
வழங்கும் விழா தேசிய நூலக மற்றும் ஆவணமாக்கல் சேவைகள் சபை கேட்போர் கூடத்தில்
20.11.2025 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

2024ஆம் வருடத்தில் பயனுள்ள வகையில் வாசிப்பை மேம்படுத்தும் திட்டங்களைச்
செயற்படுத்திய மாநகர சபைகள், நகரசபைகள், பிரதேச சபைகள் மற்றும் பாடசாலை
நூலகங்கள் என ஏறத்தாழ 1500 நூலகங்கள் இவ்விருதுக்காக அறிக்கைகளை
சமர்ப்பித்திருந்தது.

அதில், நாடு முழுவதிலும் இயங்கி
வருகின்ற நூலகங்களுள் கடந்த வருடம் மிகவும் சிறப்பாக தேசிய வாசிப்பு மாத
நிகழ்வுகளை ஒழுங்கமைத்து நடத்தியதுடன், வாசிப்பை மேம்படுத்தும் விசேட
செயற்றிட்டங்களை சிறப்பாக செயற்படுத்திய நூலகங்கள் தேர்வு செய்யப்பட்டு
அவற்றுக்கான விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.

பேத்தாழை பொது நூலகம் 

இவ்விழாவில், கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் கீழ் இயங்குகின்ற
பேத்தாழை பொது நூலகம்
பிரதேச சபை வாரியாக தேசிய ரீதியில் மீண்டும் முதல் இடத்தினை பெற்றுக் கொண்டது.

தேசிய ரீதியில் சாதனை படைத்த பேத்தாழை பொது நூலகம் | Patathali Public Library National Record Holder

இதற்கான விருதினை பௌத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி
ஹிந்தும சுனில் செனவி அவர்களும், சான்றிதழினை தேசிய நூலக மற்றும் ஆவணமாக்கல்
சேவைகள் சபையின் தலைவர் கலாநிதி ரத்ன ஸ்ரீ விஜேசிங்க வழங்கி வைக்க
பேத்தாழை பொதுநூலகப் பொறுப்பாளர் மரகதம் பிரகாஷ், சனசமூக அபிவிருத்தி
உத்தியோகத்தர் ஜனாப். அப்துல்லா ஹாரூன், நூலக உத்தியோகத்தர்களான புஸ்பா
தயாளன், புனிதா ஈவெரா, கந்தையா கங்கா ஆகியோர் இணைந்து பெற்றுக்கொண்டனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்