டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மக்களுக்கு அத்தியாவசிய நிவாரண
உதவிகள் இன்று (12)வழங்கி வைக்கப்பட்டன.
வெள்ள நிவாரணப் பணிகளுக்காக அமெரிக்கா வழங்கிய விசேட விமானம் மூலம் இந்தப்
பொருட்கள் திருகோணமலை சீனக்குடா விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்தது.
இலங்கைக்கான(Sri lanka) அமெரிக்க தூதுவர் ஜூலி சங்க் இந்தப் பொருட்களை உரிய
தரப்பினரிடம் கையளித்தார்.
டித்வா சூறாவளி
திட்ட சேவைகளுக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம் (UNOPS), UK AID மற்றும்
Australian Aid ஆகிய அமைப்புக்களின் பங்களிப்புடன் இந்த அத்தியாவசிய உதவி
வழங்கப்பட்டுள்ளது.

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட கிண்ணியா, மூதூர், மற்றும் வெருகல் பிரதேச
செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 250 குடும்பங்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளன.
மூதூர் மற்றும் வெருகலில் தலா நூறு குடும்பங்களுக்கும், கிண்ணியாவில் ஐம்பது
குடும்பங்களுக்கும் அடிப்படை தங்குமிடம் மற்றும் உணவல்லாப் பொருட்கள் (Core
Shelter/NFI Kits) வழங்கப்பட்டன.
இந்த விநியோக நிகழ்வில், திட்ட சேவைகளுக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின்
திட்ட முகாமையாளர் என். ஜி. சுரங்க, கிழக்கு மாகாண திட்ட முகாமையாளர் பி. எச்.
நிரோஷிமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






