நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 643 ஆக அதிகரித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மையம் இந்த தகவலை வழங்கியுள்ளது.
அதேநேரம், 184 பேர் இன்னும் காணவில்லை என்று மையம் தெரிவித்துள்ளது.
காணாமல் போனவர்கள்
இதன் காரணமாக, டிட்வா பேரனர்த்தத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இலங்கையை தாக்கிய புயல், 25 மாவட்டங்களிலும் மோசமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரம், குறித்த அனர்த்தத்தினால் 391,401 குடும்பங்களைச் சேர்ந்த 1,364,481 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

