முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரச்சினைகள் இருந்தால் பிரதேச செயலகத்தினை தொடர்பு கொள்ளுங்கள் : விடுக்கப்பட்ட அறிவிப்பு

பேரிடரால் பாதிக்கப்பட்ட ஒரு நபரேனும் விடுபட கூடாது என்ற ரீதியில் சரியான
முறையில் கிராம சேவையாளர் பிரிவுகளில் குழுக்களை அமைத்து திறந்த விசாரணை
இடம்பெற்று தீர்வினை வழங்குகின்றோம்.

மக்கள் ஏதாவது பிரச்சினைகள் இருந்தால்
பிரதேச செயலகத்தினை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றேன் என
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரும் கரைதுறைப்பற்று பிரதேச பதில் பிரதேச
செயலாளருமான இராசரட்ணம் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக கரைதுறைப்பற்று கிராம சேவையாளர் பிரிவுகள் தொடர்பாக வருகின்ற
மக்களின் முறைப்பாடுகள், பேரிடர் நிவாரணம் தொடர்பாக எழுந்துள்ள
விமர்சனங்களுக்கு தெளிவினை வழங்கும் முகமாக நேற்றையதினம் (15.12.2025)
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சர்ச்சையான நிலவரங்கள்

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், தற்பொழுது இருக்கும் சுற்று நிருபத்தின் பிரகாரம் மக்களுக்குரிய நிவாரணம்
வழங்குவது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு, திறைசேரியின் தெளிவான
சுற்றுநிருபங்கள் காணப்படுகின்றது.

குறிப்பாக முள்ளியவளை வடக்கு, புதறிகுடா, மணவாளசிங்கன், கள்ளப்பாடு வடக்கு,
தெற்கு போன்ற கிராம சேவையாளர் பிரிவுகளிலிருந்து பல முறைப்பாடுகள்
கிடைக்கப்பெற்றுள்ளது.

பிரச்சினைகள் இருந்தால் பிரதேச செயலகத்தினை தொடர்பு கொள்ளுங்கள் : விடுக்கப்பட்ட அறிவிப்பு | Any Problems Please Contact Divisional Secretariat

அந்த அடிப்படையில் இவற்றினை ஆய்வு செய்வதற்காக விசேடமாக
இரு குழுக்களும், அதேபோன்று திறந்த வெளிவிசாரணை நடாத்துவதற்காக உதவி பிரதேச
செயலாளர் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டு ஒவ்வொரு கிராம சேவையாளர்
பிரிவிலும் நடைபெற்று வருகின்றது.

அதனடிப்படையில் ஒவ்வொரு விடயங்களையும்
ஆராயும் போது மக்கள் குறிப்பாக எதிர்பார்ப்பது தங்களுடைய வீட்டு வளவுக்குள்
நீர் வந்தால் அந்த கொடுப்பனவு வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில்
இருக்கின்றார்கள்.

உண்மையில் வீட்டுக்குள் தண்ணீர் வந்தால் அதனை சுத்தப்படுத்தி குடியமர்வதற்காக
25,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.

ஏனைய சேதத்திற்குட்பட்டால்
மதீப்பீடு செய்து எதிர்காலத்தில் கொடுப்பனவுகளை கொடுக்க வேண்டும். இந்த
அடிப்படையிலே சுற்றுநிருபம் வெளியிடப்பட்டு அதன் பிரகாரமே நடைபெற்று
வருகின்றது.

இருந்தாலும் சில நாட்களாக ஏற்பட்டிருக்கும் சர்ச்சையான நிலவரங்களுக்குரிய
காரணங்களாக வெளிவளவுக்குள் நீர்வந்தமை, புகைக்கூடு, சமையல் அறையில் நீர்
வடிந்தமை, தூவானம் அடித்த காரணத்தால் தமக்கு நிவாரணம் தரவேண்டும் என்ற
கோரிக்கைகளும் எழுந்திருக்கின்றது.

ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் 

குறித்த காலப்பகுதியில் தொலைத்தொடர்பு இல்லாதால் சரியான முறையில் தொடர்பாடல்
இருக்கவில்லை, சில கிராமங்களில் கிராம அலுவலகர்கள் சில வீடுகளுக்கு சென்று
பார்க்கவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கின்றது.

கரைதுறைப்பற்று பிரதேசத்தினை எடுத்து பார்த்தால் சிறப்பாக வேலைசெய்யும் பல
கிராம சேவகர்கள் சேவை ஆற்றுகின்றார்கள். அதேநேரம் குறித்த காலப்பகுதியில்
சரியான முறையில் வேலைசெய்யாத இரு உத்தியோகத்தர்களுக்கு எதிராக நாம் நடவடிக்கை
எடுத்து மாற்றி பதில் உத்தியோகத்தரை நியமித்து நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.

பிரச்சினைகள் இருந்தால் பிரதேச செயலகத்தினை தொடர்பு கொள்ளுங்கள் : விடுக்கப்பட்ட அறிவிப்பு | Any Problems Please Contact Divisional Secretariat

ஆகவே தற்போது எழுந்திருக்கின்ற குற்றச்சாட்டு பல உத்தியோகத்தர்களை
பாதித்திருக்கின்றது. முள்ளியவளை வடக்கு தொடர்பாக விஷேட குழுவினரை கொண்டு
ஆராய்ந்த போது அங்கே தனிநபர்களுக்கும் கிராம அலுலருக்கும் நீதிமன்ற வழக்கு வரை
முறைப்பாடு இருக்கும் காரணத்தினால் பிரச்சினைகள் ஏற்பட்டிருப்பதனை
காணக்கூடியதாக இருக்கின்றது.

பாதிப்பு தொடர்பாக நடவடிக்கை
எடுக்கப்பட்டிருக்கின்றது.
தனிப்பட்ட விரோதம் காரணமாக பல குற்றச்சாட்டுக்கள்
முன்வைக்கப்பட்டிருக்கின்றது. எங்களுக்கு மக்கள் அனைவரும் சமம் ஆகவே அவர்கள்
செய்வது தவறு என நாம் சுட்டிக்காட்ட விரும்பவில்லை.

எதிர்காலத்தில் ஏதாவது கிராமசேவகர் பிரிவில் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால்
நிச்சயமாக கிராம அலுவலகரால் தீர்வினை வழங்க முடியாவிட்டால் பிரதேச செயலகத்தினை
நாடுங்கள்.

பிரதேச செயலகத்தால் தீர்வினை வழங்க முடியாவிட்டால் நீங்கள் மாவட்ட
செயலகத்தினை நாடமுடியும்.

நாம் பல குழுக்களை அமைத்து அனைத்து இடங்களிலும் திறந்த விசாரணை இடம்பெற்று
தீர்வினை வழங்குகின்றோம்.

பாதிக்கப்பட்ட ஒரு நபரேனும் விடுபட கூடாது அதே நேரம்
பாதிக்கப்படாத ஒருவருக்கும் கொடுப்பனவை கொடுக்க கூடாது என்ற ரீதியில் சரியான
முறையில் கண்காணித்து வருகின்றோம்.

முல்லைத்தீவில் எந்த பிரச்சினையும் இன்றி
நடைபெறுகின்றது.எனினும் தற்பொழுது ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக விசாரணை செய்து
வருகின்றோம். எனவே உண்மை நிலையினை மக்கள் அறியவேண்டும் என்பதற்காகவே இந்த
ஏற்பாட்டினை செய்திருந்தோம்.

எனவே மக்கள் ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் பிரதேச
செயலகத்தினை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.