உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இன்று(17) காலை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,307 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
அதேநேரம் நேற்று (16) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,277 அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்ததாக செய்திகள் கூறுகின்றன.
இலங்கையில் விலை நிலவரம்
இதேவேளை, நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (17) 22 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1700 ரூபாயால் அதிகரித்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கப் பவுண் ஒன்று 340,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்க பவுண் ஒன்று 314,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கத்தின் விலை
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 39,313 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

