பேரிடரில் ஏற்பட்ட பாரிய பாதிப்பை ஈடுசெய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை கோரியிருந்த அவசர நிதி தொடர்பில் தீர்மானம் எடுப்பதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
அவசர நிதி உதவி
இலங்கை கோரிய அவசர நிதி உதவி (Rapid Financing Instrument) குறித்து நாளை மறுநாள் (19.12.2025) முடிவை அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரிடரில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சமாளிக்க அவசர நிதித் தேவைகளுக்காக இலங்கை அதிகாரிகள் சர்வதேச நாணய நிதியத்திடம் சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கோரியிருந்தனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்கு உட்பட்டு, இந்த கோரிக்கையை சர்வதேச நாணய நிதியம் மறுபரிசீலனை செய்து வருகிறது. மேலும் இது குறித்த முடிவு நாளை மறுநாள் (19) அறிவிக்கப்படும் என நிதியம் குறிப்பிட்டுள்ளது.

