அனுராதபுரம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக் மகேந்திர அதிகாரி(Janak Mahendra Adikari) மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்தப் பிரதி அமைச்சர் எஸ்.சி. முத்துக்குமாரண(S. C. Muthukumarana) காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கெக்கிராவ தொகுதி அமைப்பாளராகவும் பணியாற்றிய ஜனக் மகேந்திரா, உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
கலாவெவ தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி
முன்னாள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்தப் பிரதி அமைச்சருமான முத்துக்குமாரண, சிறிது காலமாக சுகவீனமுற்றிருந்த நிலையில் நேற்று(17) மாலை காலமாகியுள்ளார்.

அவர் மறைந்த ஜனக் மகேந்திர அதிகாரி அரசியலில் ஈடுபட்ட அதே நேரத்தில் இருந்த ஒரு அரசியல்வாதி ஆவார்.
இவர் தலாவ பிரதேச சபை உறுப்பினராகவும், முன்னாள் முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திசாநாயக்கவின் காலத்தில் வடமத்திய மாகாண சபையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
பின்னர் அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு 2010 இல் கலாவெவ தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார்.
பின்னர் சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்தங்களுக்கான பிரதி அமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.

