கிழக்கு பல்கலைக்கழக பேரவையில் உரிய எண்ணிக்கைக்கு மாறாகவும் முறையற்ற
வகையிலும் வழங்கப்பட்டுள்ள நியமனங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில்
கிழக்கு பல்கலைக்கழக ஆசிரிய சங்கத்தினால் நேற்றைய தினம், அடையாள பணிபுறக்கணிப்பு
முன்னெடுக்கப்பட்டதாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கத்தின் தலைவர்
பேராசிரியர் முத்துக்குமார் சுகிர்தன் தெரிவித்தார்.
நேற்று பிற்பகல் மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை
அவர் தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர், “இன்று நாங்கள் கிழக்கு பல்கலைக்கழகத்தில் வேலை நிறுத்த போராட்டத்தினை
முன்னெடுத்துள்ளோம்.
அதியுச்ச நிர்வாகக் கட்டமைப்பு
கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால்
முன்னெடுக்கப்படுகின்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடபான விளக்கம் அளிப்பதற்காக
ஊடக சந்திப்பினை நடத்துகின்றோம்.

கடந்த காலங்களில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் முறைகேடான
நியமிப்புகள் மற்றும் கவுன்சிலில் தவறான விடயங்கள் தொடர்பில் தெரிவிக்க
வந்துள்ளோம்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அதியுச்ச நிர்வாகக் கட்டமைப்பான
கவுன்சலிலே உரிய எண்ணிக்கைக்கு மாறாக அதில் அங்கத்தவர்கள்
நியமிக்கப்பட்டிருந்தனர். அதில் இரண்டு பீடங்களின் பீடாதிபதிகள் எந்தவித
இடைவெளிகள் இல்லாமல் நியமிக்கப்பட்டிருந்தனர்.
அப்படி இருந்தும் ஒருவர்
அதிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். மற்றைய பீடாதிபதி தொடர்ந்தும் இருப்பதற்கு
அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். இது எமது கவுன்சிலின் எண்ணிக்கையைப்
பாதிக்கின்ற வகையிலே இருக்கின்றது” என குறிப்பிட்டுள்ளார்.

