யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கு சுடலைக்கு வீதியின்மையால்
இறுதிக்கிரிகை செய்ய முடியாமல் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
நாகர்கோவில் கிழக்கில் நேற்றைய தினம்(19.12.2025) இறந்து போன ஒருவரது இறுதிக்கிரியைகளை
மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சுமாராக இரண்டடி உயரத்திற்கு மழை வெள்ளம் நின்ற காரணத்தினால் கொட்டகை இல்லாமல் வெறும் நிலத்தில் வைத்து தகன வேலைப்பாடுகன் நடந்துள்ளன.
இந்த நிலையில் அப்பகுதி மக்கள், இதற்கு உரியவர்கள்
கவனமெடுத்து சுடலைக்கான வீதி மற்றும் கொட்டகை அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.





