குடிநீர் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மருத்துவ கலாநிதி வாசன் ரட்ணசிங்கம், பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அனர்த்தத்தின் பின்னரான தற்போதைய சூழலில் குடிநீரில் கவனம் செலுத்த வேண்டும்.
பாதிக்கும் நோய்கள்
வெள்ளப்பெருக்குக்கு பின்னரான காலப்பகுதியில் குடிநீரை அருந்தும் போது வாந்தி, வயிற்றோட்டம் போன்ற நோய்களுக்கு மக்கள் முகங்கொடுக்கின்றனர்.

இந்த காலகட்டத்தில் மக்கள் சுத்தமான நீரைப் பருகுவதையும், தமது அன்றாட வாழ்க்கையில் தூய நீரை பயன்படுத்துவதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
நீரைக் கொதிக்க வைத்து ஆறவைத்து எடுத்துக் கொள்வது சிறந்தது. நீரினால் பரவுகின்ற நோய்களை இதன் மூலம் கட்டுப்படுத்தலாம் என குறிப்பிட்டுள்ளார்.

