முல்லைத்தீவு மாவட்டத்தில் தொலைத்தொடர்பு சேவையினை வழங்கிவரும் மொபிட்டல்
நிறுவனத்தின் தொலைத்தொடர்பு வயர்கள் வட்டுவாகல் பாலத்தின் கீழாக சென்றுள்ளன.
இந்நடவடிக்கை நேற்று (20.12.2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மீட்பு நடவடிக்கை
கடந்த வெள்ளப்பெருக்கின் போது இந்த வயர்கள் அனைத்தும் வெள்ளத்தில் இழுத்து
செல்லப்பட்டு அறுந்த நிலையிலேயே தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இருந்தும் தொலைத்தொடர்பு இணைப்பினை சீர்செய்த குறித்த நிறுவனம் வட்டுவாகல்
பாலத்தில் வெள்ளத்தில் அள்ளுட்ட பைவர் லையினுக்குரிய வயர்களை மீட்டுள்ளார்கள்.
குறித்த தொலைத்தொடர்பு நிறுவனத்தின்
உத்தியோகத்தர்கள் வட்டுவாகல் பாலத்தினுள் ஓடும் தண்ணீரூக்குள் இறங்கி எடுத்து
இணைப்பினை சீர்செய்யும் நடவடிக்கைக்கு துணையாக அருகில் உள்ள கோட்டபாய
கடற்படை தளத்தில் உள்ள கடற்படை அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்கி வயர்களை
மீட்டு சீர்செய்துள்ளார்கள்.







