கம்பஹாவின் பிரபல பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவர் பரிசளிப்பு விழா மேடையில் அதிபரை கடுமையாக விமர்சனம் செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கம்பஹா சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியின் பரிசளிப்பு விழா நிகழ்வு மேடையில் குறித்த மாணவி அதிபரை பெற்றோர் அதிதிகள் முன்னிலையில் மேடையில் ஏறி விமர்சனம் செய்துள்ளார்.
தமக்கு கிடைக்கப் பெறவிருந்த விருதினை அநீதியான முறையில் நிறுத்தி பொருத்தமில்லாத ஒருவருக்கு வழங்கியதாக விழா மேடையில் மாணவி குற்றம் சுமத்தியமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரியின் சார்பில் பல ஆண்டுகளாக தாம் வெற்றிகளை குவித்து வந்ததாக தெரிவித்துள்ளார்.
சர்வதேச மற்றும் தேசிய ரீதியில் ஸ்குவாஷ் போட்டிகளில் அபார திறமைகளை தான் வெளிப்படுத்தியதாக அந்த மாணவியை தெரிவித்துள்ளார்.
எனினும் பரிசளிப்பு நிகழ்வின் ஒத்திகை ஒன்றிற்கு தாம் சமூகமளிக்காத காரணத்தினால் அதற்கு தண்டனையாக தமக்கு கிடைக்கப் பெறவிருந்த விருதினை அதிபர் தடுத்து நிறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி மாணவிகள் முதுகெலும்பு உடையவர்கள் எனவும் அநீதிக்கு எதிராக தைரியமாக குரல் கொடுக்கக் கூடியவர்கள் எனவும் அவர் விழா மேடையில் தெரிவித்து இருந்தார்.
பொதுநலவாய போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச மற்றும் தேசியப் போட்டிகளில் தாம் கல்லூரியின் பெயரை உயர்த்திய நிறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஒரு பின்னணியில் தமக்கு கிடைக்கப்பெற வேண்டிய விருதினை அதிபர் வேண்டுமென்றே தடுத்து நிறுத்தியதாக அவர் விழா மேடையில் கூறியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சனித்மா செனலி என்ற மாணவியே இவ்வாறு அதிபரின் நடவடிக்கையை எதிர்த்து விழா மேடையில் விமர்சனம் செய்துள்ளார்.
விழா மேடையில் அதிபரை விமர்சனம் செய்யும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளதுடன் இது குறித்து மாறுபட்ட கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

