சில மணி நேரங்களுக்கு முன்னர், தையிட்டியில் நிலவிய பதற்றமான நிலைக்கு வன்மையான
கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி பேச்சாளர்
கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையிலேயே குறிப்பிட்டுள்ளார்.
போராட்டம் தொடரும்..
அதில்
மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“இன்றைய தாக்குதல்களும் கைதுகளும் அநுரகுமார தலைமையிலான JVP – NPP
அரசாங்கத்தின் இனவாதக் கோர முகத்தையே காட்டுகின்றது.
எங்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியவர்களே ஒருகணம் சிந்தியுங்கள், இன்றைய தினம் இந்து மதத்தலைவருக்கு நடந்தது நாளைக்கு உங்களுக்கும் நடக்காது என்பதற்கு
என்ன உத்தரவாதம்.

நாங்கள் போராடுவது உங்களுக்கும் சேர்த்துத்தான் என்பதை மறவாதீர்கள்.
போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும் இனத்துக்கான போராட்டம்
தொடரும். இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை” என குறிப்பிட்டுள்ளார்.





