முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையில் டித்வா புயலால் ஏற்பட்ட சேதம்! உலக வங்கி வெளியிட்ட அறிக்கை

இலங்கையைத் தாக்கிய டித்வா சூறாவளி காரணமாக கட்டிடங்கள், விவசாயம் மற்றும் முக்கியமாக உட்கட்டமைப்புகளுக்கு 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (21.12.2025) வெளியிடப்பட்டுள்ள உலக வங்கி குழுமத்தின் உலகளாவிய விரைவான பேரிடர் சேத மதிப்பீட்டு (GRADE) அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இந்த சேதம் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 4 சதவீதத்திற்கு சமம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

மதிப்பீடு 

வறுமை மற்றும் காலநிலை அபாயங்கள் காரணமாக பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் இந்த அனர்த்தத்தினால் மீண்டெழுவதில் அதிக சவால்களை எதிர்கொள்வதாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரம், கல்வி மற்றும் விவசாயம் போன்ற அத்தியாவசிய சேவைகளை மீளமைக்க, தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களில் இருந்து 120 மில்லியன் டொலர்களை உலக வங்கி அவசரமாக ஒதுக்கியுள்ளது.

இலங்கையில் டித்வா புயலால் ஏற்பட்ட சேதம்! உலக வங்கி வெளியிட்ட அறிக்கை | Estimated Damage From Cyclone Ditwah In Sri Lanka

நிவாரணப் பணிகளைத் தாண்டி, எதிர்காலக் கட்டுமானங்களில் காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளக்கூடிய வலுவான வடிவமைப்புகளைப் பின்பற்றுவது அவசியம் என அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

இந்த மதிப்பீட்டைப் பூர்த்தி செய்வதில் இலங்கை அரசாங்கம் காட்டிய தலைமைத்துவத்தை உலக வங்கி அங்கீகரித்துள்ளது.

வெளிநாட்டு வளங்கள் திணைக்களம், திறைசேரி, தேசிய திட்டமிடல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றின் நெருக்கமான ஒத்துழைப்புடன் இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிதி உதவி

அனர்த்தங்கள் வறுமை கோட்டில் உள்ளவர்களையும், மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களையும் பெரும்பாலும் பாதிக்கின்றன.

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, உலக வங்கியின் Global Rapid Post-Disaster Damage Estimation (GRADE) அணுகுமுறையானது, அனர்த்தங்களுக்குப் பின்னர் முடிவெடுப்பதற்குத் தேவையான ஆதார அடிப்படையிலான மதிப்பீடுகளை சரியான நேரத்தில் வழங்குவதன் மூலம் 54 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஆதரவளித்துள்ளது.

இலங்கையில் டித்வா புயலால் ஏற்பட்ட சேதம்! உலக வங்கி வெளியிட்ட அறிக்கை | Estimated Damage From Cyclone Ditwah In Sri Lanka

கடந்த பத்து ஆண்டுகளில், GRADE உலகளவில் 71 அனர்த்தத்திற்குப் பிந்தைய மதிப்பீடுகளை நிறைவு செய்துள்ளது.

தரையில் நேரடியாக மேற்கொள்ளப்படும் விரிவான மதிப்பீடுகளுடன் ஒப்பிடும்போது, இவை சுமார் 90 சதவீத துல்லியமான தரவுகளுடன் உறுதிப்படுத்தப்படுகின்றன.

இலங்கைக்கான GRADE அறிக்கையானது, உலக வங்கியின் ஒத்துழைப்புடன், வளர்முக நாடுகளில் அனர்த்த முகாமைத்துவத்தை பிரதானப்படுத்தும் உலக வங்கியின் திட்டத்தின் ஊடாக, அனர்த்தக் குறைப்பு மற்றும் மீட்புக்கான உலகளாவிய வசதி (GFDRR) மற்றும் ஜப்பானின் நிதி அமைச்சு ஆகியவற்றின் நிதி உதவியுடன் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.