முன்னாள் ஹாங்காங் கிரிக்கெட் வீரரும், உடற்பயிற்சி உடலியல் நிபுணருமான ராகுல் சர்மா, குழந்தை பருவ புற்றுநோய் ஆராய்ச்சிக்காக நிதி திரட்டுவதற்காக இலங்கை முழுவதும் ஓட்டப் பயணத்தை உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, அவர் ஒரு வாரம் இலங்கையில் தங்கி இருந்து நீண்ட தூரம் ஓட உள்ளார்.
இந்தநிலையில், அவர் தனது ஓட்டப் பயணத்தை எதிர்வரும் டிசம்பர் 24 ஆம் திகதி வடக்கு முனையில் உள்ள பருத்தித்துறை முனையிலிருந்து ஆரம்பித்து டிசம்பர் 30ஆம் திகதிக்குள் தெற்கில் உள்ள டோண்ட்ரா ஹெட்டில் முடிக்க திட்டமிட்டுள்ளார்.
நிதி திரட்டும் பணி
டிசம்பர் 18ஆம் திகதி மும்பையில் இருந்து இலங்கைக்கு வந்த அவர், சிட்னியை தளமாகக் கொண்ட குழந்தைப் பருவப் புற்றுநோயைக் குணப்படுத்துவதில் கவனம் செலுத்தும் குழந்தைகள் புற்றுநோய் நிறுவனத்திற்கு குறைந்தபட்சம் அவுஸ்திரேலிய டொலர்கள் 20,000 (தோராயமாக ஹாங்காங் டொலர் 101,470 அல்லது அமெரிக்க டொலர் 13,052) நிதி திரட்டும் பணியை மேற்கொண்டு வருகிறார்.

அத்தோடு, ஹாங்காங்கை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான எரேஸ் பாவர்ட்டி, சர்மா திட்டமிட்டபடி ஓட்டத்தை முடித்தால், ஹாங்காங் டொலர்கள் 10,000 (US$1,286) நன்கொடையாக வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

