மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் துறை, 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைக் குறியீடு மற்றும் மாதாந்திர நுகர்வோர் பணவீக்கத்தை அறிவித்துள்ளது.
அதன்படி, 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் 2.7% ஆக பதிவான நாட்டின் பணவீக்க விகிதம், 2025 ஆம் ஆண்டு நவம்பரில் 2.4% ஆகக் குறைந்துள்ளது.
பணவீக்கம்
இதேவேளை, 2025 ஆம் ஆண்டு ஒக்டோபரில் 4.1% ஆக பதிவான உணவுப் பிரிவில் பிரதான பணவீக்க விகிதம், 2025 ஆம் ஆண்டு நவம்பரில் 3.6% ஆகக் குறைவடைந்துள்ளது.

2025 ஆம் ஆண்டு ஒக்டோபரில் 1.5% ஆக இருந்த உணவு அல்லாத பிரிவில் பிரதான பணவீக்க விகிதம், 2025 ஆம் ஆண்டு நவம்பரில் 1.5% ஆக மாறாமல் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

