டிட்வா சூறாவளி நிவாரண உதவிக்காக புதிய பதிவு திட்டம் ஒன்றை அரசாங்கம்
ஆரம்பித்துள்ளது.
இதன்படி, ஜனவரி 6க்குள் இணையம் மூலப் பதிவு கட்டாயம் என்று
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பதிவுத் திட்டம்
சூறாவளியால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு அவசர நிவாரண
உதவிகளை வழங்குவதற்காகவே, அரசாங்கம், இந்த பதிவுத் திட்டத்தை
ஆரம்பித்துள்ளது.

இதன்படி, பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் விபரங்களை எதிர்வரும் ஜனவரி 6 ஆம்
திகதிக்குள் அரச இணையதளம் வழியாகச் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்காக அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள்
விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

