உலகம் முழுவதும், இயேசுவின் பிறந்தநாளை அனைவரும் நத்தார் பண்டிகையாக நாளை (25) கொண்டாடுகின்றனர்.
அந்தவகையில், கொழும்பில் நத்தார் பண்டிகை நிகழ்வுகள் மற்றும் வியாபாரங்கள் களைகட்டியுள்ளன.
கொழும்பில் சந்தைகளில் நத்தார் பண்டிகையை கொண்டாடுவதற்காக மக்கள் புத்தாடைகள், பட்டாசுகள், கிறிஸ்துமஸ் மரங்களை வாங்கிச் செல்வதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
அதேவேளை, பலர் வீதியோர வியாபார நடவடிக்கையினை அகற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

