இயேசு பிரானின் பிறப்பைக் கொண்டாடப்படும்
நத்தார் பண்டிகை முன்னிட்டு நாடெங்கும் உள்ள தேவாலயங்களில் விசேட வழிபாடுகள்,
ஆராதனைகள் நடைபெற்றன.
அதன்படி, நுவரெலியா புனித பிரான்சிஸ் சவேரியார் தேவாலயம் ( St. Francis
Xavier’s church Nuwara eliya ) மற்றும் ஹட்டன் ஸ்ரீ கிராஸ் தேவாலயம்
(Hatton Holy Cross Church) இல் நத்தார் ஆராதனை நடைபெற்றது.
விசேட திருப்பலி
இதனடிப்படையில், இரவு 12 மணியிலிருந்து வழிபாட்டு நிகழ்வுகள்
ஆரம்பிக்கப்பட்டது. பாலன் இயேசுவின் பிறப்புத் தினமான நத்தார் தின விசேட
திருப்பலி நள்ளிரவு ஒப்புக்கொடுக்கப்பட்டது.

குறிப்பாக நுவரெலியா புனித பிரான்சிஸ் சவேரியார் தேவாலயத்தில் (24) நள்ளிரவு
(25) காலை முதல் மூன்று மொழிகளிலும் கிறிஸ்துமஸ் ஆராதனைகள் இடம்பெற்றன.
மேலும் கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனை நிறைவின்போது மக்கள் தங்களுக்குள்
வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டதையும் காண முடிந்தது. இதன்போது ஆலயங்களுக்கு உள்ளே மற்றும் வெளியே பொலிஸார் மற்றும் இராணுவத்தினர்
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமையைக் காணக்கூடியதாக இருந்தது.
இயேசு பிறப்பினை குறிக்கும் வகையில் பாலன் பிறப்பு கொட்டில்
திறக்கப்பட்டு பாலன் திருச்சொரூபம் வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்
மலையகத்தில் கிறிஸ்தவர்கள் நத்தார் பண்டிகையை மிக விமர்சையாக கொண்டாடி
வருகின்றனர்.
தலவாக்கலை சென் பெட்ரிக் தேவாலயம்
உலகெங்கும் வாழும் கிறிஸ்த்தவ பெருமக்கள் இயேசு பிரானின் பிறப்பினை நினைவு
கூர்ந்து கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மலையக பகுதியில் பேரிடரால் உயிர்நீத்தவர்களை நினைவு கூர்ந்து இம்முறை நத்தார் ஆராதனைகள் சிறப்பாக இடம்பெற்றன.
தலவாக்கலை சென் பெட்ரிக் தேவாலயத்தின் நத்தார் ஆராதனை பங்கு தந்தை க்கிளமன்ட்
ஜேசுதாஸ் அடிகளார் தலைமையில் மிகவும் எளிமையான முறையில் நத்தார் ஆராதனை மிக
சிறப்பாக நடைபெற்றது.
இதில் பேரிடரால் உயிர்நீத்த மக்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆத்மா
சாந்தி வேண்டி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டடு தேவ ஆராதனை ஆரம்பிக்கப்பட்டன.
பொது மக்கள் கருத்து
இதில் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கு ஆட்சியாளர்களுக்கு நல்லாசி வேண்டி
பிரார்தனைகளும் இடம்பெற்றன.
அதனை தொடர்ந்து விசேட நத்தார் தின ஆராதனை இடம்பெற்றதுடன் திருப்பலி
ஒப்புக்கொடுத்தல், கீதங்கள் இடம்பெற்று ஒருவருக்கு ஒருவர் அன்பினையும்
தோத்திரதினையும் பகிர்ந்து கொண்டனர்.
நத்தார் தேவ ஆராதனையினை முன்னிட்டு ஆலயத்திற்கு பலத்த இரானுவம் மற்றும் பொலிஸ்
பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தன.
இந்த ஆராதனை தலவாக்கலை நகர் பகுதியினை சேர்ந்த மற்றும் தோட்டப்புறங்களைச்
சேர்ந்த ஏராளமான பக்தர் கலந்து கொண்டிருந்தனர்.
இது குறித்து பொது மக்கள் கருத்து தெரிவிக்கையில், கடந்த கால நத்தார் பண்டிகையை
போல் இந்த வருட நத்தார் பண்டிகை மிகவும் சோகமாக அமைந்ததாகவும் பேரிடரால்
உயிர்நீத்த மக்களை எண்ணும் போது மிகவும் கவலையாக இருப்பதாகவும் இதனால் இந்த
வருட நத்தார் பண்டிகையை மிகவும் விசேடமாக கொண்டாட முடியாத நிலை
ஏற்பட்டுள்ளதாகவும் பிள்ளைகளுக்காகவே இம்முறை நத்தார் பண்டிகையினை
கொண்டாடுவதாகவும் மக்கள் தெரிவித்தனர்.
செய்தி-மலைவாஞ்சன்







