இயேசு கிறிஸ்துவின் பிறந்ததினமான
இந்த புனித கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு, மனமார்ந்த கிறிஸ்துமஸ்
வாழ்த்துக்களை மக்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன் என ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பேச்சாளர் முபாறக் முப்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில், ”அன்பு,
மனிதாபிமானம், சகோதரத்துவம், மத நல்லிணக்கம் என மனித வாழ்க்கைக்குத் தேவையான
பல நல்ல ஒழுக்கங்களைக் கற்றுத் தந்த இயேசு பிரானின் பிறந்தநாளைக் கிறிஸ்மஸ்
தினமாகக் கொண்டாடி மகிழும் அனைத்து கிறிஸ்துவ சமூகத்தினருக்கும்
வாழ்த்துக்கள்.
போதனைகள்
நத்தாரின் உண்மையான அர்த்தம் மனிதநேயம் மற்றும் அன்பான
தியாகத்தை வலியுறுத்துவதும், அத்தகைய வாழ்க்கைக்குத் தேவையான ஆன்மீக பாதைகளைத்
திறப்பதுமாகும்.

மண்ணக மாந்தரின் பாவம் போக்க விண்ணக தேவன் மனித உருவெடுத்த
இந்த நாளை உலகவாழ் மக்கள் கிறிஸ்மஸ் பண்டிகையாக இன்று கொண்டாடுகின்றனர்.
தியாகம்,கருணையை எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடியாக இயேசுவின் பிறப்பு
அமைந்துள்ளது.சமூகத்தின் நல்வாழ்வைப் போன்று, பாவத்தின் இருளை அகற்றுவதே இயேசு
கிறிஸ்து போதித்த உன்னதப் செய்தியாகும்.
சமாதானம், கருணை, இரக்கம் போன்ற
வழிகாட்டல்களின் மூலம் தவறான புரிதலை நீக்கப்பெற்ற சுபீட்சமான வாழ்க்கை
நெறிக்கு இந்தப் போதனைகள் வழிகாட்டுகின்றன.
இந்த புனித நாள் அனைத்து இன, மத
வேறுபாடுகளையும் தாண்டி, ஒற்றுமை, சமாதானம் மற்றும் பரஸ்பர புரிதலை
வலுப்படுத்தும் நாளாக அமையட்டும். நம் நாட்டில் நிலையான அமைதி, சமூக நீதியும்,
மக்களின் நலனும் மலர இந்நாள் புதிய நம்பிக்கையையும், உற்சாகத்தையும்
அளிக்கட்டும் என்று பிரார்த்திக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

