பிரதேச செயலகத்தினர் மற்றும் கட்டட ஆராய்ச்சி நிலைய அதிகாரிகளால் உரிய நடவடிக்கை
எடுக்கப்படவில்லை என தெரிவித்து பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டம் நேற்றைய தினம் (24.12.2025) தலவாக்கலை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கிரேட்வெஸ்டனை சேர்ந்த பாதிக்கப்பட்ட குடும்பங்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கவனஈர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு
இதன்போது போராட்டக்காரர்கள் இடைதங்கல் முகாமுக்கு முன்பாக பதாதைகளை ஏந்திய வண்ணம் அமைதியான முறையில் கவனஈர்ப்பு போராட்டத்தை
முன்னெடுத்தனர்.
கிரேட்வெஸ்டன், லூயிஷா தோட்டத்தில்
குடியிருப்பு பகுதியில் உள்ள மலையில் இருந்து கடந்த 27ஆம் திகதி கட்பாறைகள்
சரிவு காரணமாகவும், மண்சரிவு எச்சரிக்கை காரணமாகவும் 72 குடும்பங்களைச் சேர்ந்த
264 பேர் கிரேட்வெஸ்டன் தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தொடர்ச்சியாக மூன்று வாரம் இதே பாடசாலையில் தங்கி வருகின்றனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தமக்கு பாதுகாப்பான இடத்தை வழங்க வேண்டும்
எனவும், அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், உடனடியாக தமக்கு
பாதுகாப்பான இடத்தில் வீடுகளை அமைத்து தருமாறும் கோரி ஆர்ப்பாட்டத்தை
முன்னெடுத்தனர்.
குற்றச்சாட்டு
அத்தோடு பெருந்தோட்ட கம்பெனிகள் தோட்ட தொழிலாளர்களை அடிமையாக
வைத்திருப்பதாகவும் தமக்கு வழங்க வேண்டிய உரிமைகளை வழங்குவதில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
போராட்டத்தினை தொடர்ந்து நுவரெலியா கட்டட ஆராய்ச்சி நிலையத்தின்
அதிகாரிகள் இத்தோட்டத்துக்கு வருகை தந்து வனப்பகுதியில் வெடிப்புற்று
இருக்கின்ற இடங்களை பரிசோதனை செய்ததோடு மக்கள் வாழும் குடியிருப்பு
பகுதிகளையும் ஆய்வு மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.



