ஊடகம் கேள்வி கேட்கும்.
அது அதன் வேலை.
அரசியல்வாதி பதில் சொல்ல வேண்டும். ஜனநாயக ரீதியில் அது அவரது பொறுப்பு.
இந்த எளிய சமன்பாடு
யாருக்கு எரிச்சலாக இருக்கிறதோ,
பிரச்சினை கேள்வியில் இல்லை. அந்த பதில்களில் தான்.
ஒரு ஊடகவியலாளர் கேள்வி கேட்டார். அதற்கு பதிலாக பதில் வரவில்லை. பதிலுக்கு ‘பொறுமை’ காணாமல் போனது. ஜனநாயகத்தில் கேள்வி என்பது குற்றமாம் போல, அதை கேட்டவரே குற்றவாளி போல பேசப்பட்டது.
‘சுதந்திரம் இருக்கிறது’ என்று மேடையில் சொல்லி, அதே சுதந்திரம் மைக்கை பிடித்தவுடன் ‘அமைதி’ ஆகி விடுகிறது.
கேள்வி கேட்டால் கோபம், கோபம் வந்தால் குற்றச்சாட்டு, குற்றச்சாட்டு வந்தால். அது தான் அரசியல் விளக்கம்.
ஊடகம் என்பது கண்ணாடி போன்றது. அதில் விம்பம் சிறப்பாக இல்லையென்றால், கண்ணாடியை குறை சொல்வது என்ன நியாயம்?
பதில்கள் இல்லாத இடத்தில் சத்தம் அதிகம். ஆதாரங்கள் இல்லாத இடத்தில் ஆவேசம் அதிகம். ஆனால் மக்கள் பார்க்கிறார்கள் . கேள்வியை யார் தவிர்க்கிறார்கள், பொறுப்பை யார் தள்ளுகிறார்கள் என்று.”
ஊடக சுதந்திரம் பற்றி அறிக்கை வாசிக்கிற அரசியல்வாதிகள், அதே சுதந்திரம் ஒரு மைக்குடன் வந்தால் ஏன் அவ்வளவு பதற்றம்? கேள்விக்கு பதில் சொல்ல முடியாதபோது.
கேள்வியையே சந்தேகமாக மாற்றுவது இப்போது ஒரு அரசியல் உத்தியாக மாறிவிட்டது. ஆதாரம் இல்லாத இடத்தில் ஆவேசம் மட்டும் நிறைய இருக்கிறது.
ஊடகவியலாளரின் நோக்கம் குறித்து நீளமான உரைகள் வரும். ஆனால் அந்த கேள்வியின் மையம் குறித்து ஒரு வரியும் வராது. இது பதில் தவிர்க்கும் அரசியல் நயமா, அல்லது பொறுப்பைத் தள்ளும் பயமா? உண்மையில் கேள்விகள் தான் அரசியலை வலுப்படுத்தும்.
அவை எதிரிகள் அல்ல. அவை கணக்குக் கேட்ட நண்பர்கள் அதையே ஒவ்வொரு ஊடகவியலாளரும் செய்கின்றனர்.
அதையே ஊடகவியலாளர் செல்லதுரை கிருஷ்ணகுமாரும் செய்துள்ளார்.
அறமற்ற ஒன்றை ஒரு மனிதனாக நினைத்துக்கொள்வதே அநியாயம். ஆனால் ஒரு ஊடகவியலாளரை பற்றி தனது முகநூலில் குரைத்திருக்கிறது ஒரு ஜீவன்.
புத்திகெட்ட மனிதர்களை கல்விமான் என காவித்திரியும் ஒரு சிலருக்கு கல்வி என்பதன் அளவீடு அறிந்திருக்க வாய்ப்பில்லை.
தன்னால்தான் ஊடகங்கள் பிழைக்கிறது என்று குரைவெறியில் அலையும் அந்த ஜீவனுக்கு ஒரு நினைப்பு.
இன்று ஒரு செய்தியாளர் நேற்று பல்கலைகழக மாணவர்கள், முந்தைய நாள் பெண் பிரதேசசபை உறுப்பினர், நல்லூர் ஆலயம், ஒரு சில மாதங்களுக்கு முன் யாழ்ப்பாணத்து இளைஞர்கள் , அதற்குமுன் புலம்பெயர் தமிழர்கள் என நீண்ட ஒரு பட்டியலில் தன் அநாகரீகத்தை வெளிப்படுத்துகிறது.
அந்த ஜீவன் உண்மையில் செய்தியாளர்களும் செய்தி நிறுவனங்களும் இந்த உயிரி தொடர்பிலான செய்திகளை கூட்டாக தவிர்த்து விடவேண்டும் என்ற என்னம்.
சமூகத்துக்காக பேசுகிறேன் என பம்பை மேளம் அடித்துக்காட்டி தனது சபலங்களை நிறைவேற்ற காசு இனவாத அரசியலின் நண்பன் தொடர்பில் கவனம் கொள்ள வேண்டும்.
உண்மையிலேயே ஈழத்தமிழ் தலைவர்களின் பெயர்களை உச்சரிக்கவே அருகதையற்ற அந்த ஜீவன் ஈழத்தலைவரை தனது தலைவர் என்கிறார்.
இப்படிப்பட்ட ஒருவரையும் கொண்டாடுகிறவர்கள் எப்படியானவர்கள் என்றால் தமது மூளையை குளிர்காலமென வீட்டு அலுமாரிகளில் பத்திரப்படுத்தி வைத்திருப்பவர்களாகவே இருக்க வேண்டும். இதுவே நிதர்சனம்…
நாடாளுமன்ற சிறப்புரிமை இருப்பதாகக் கருதி வாய்க்கு வந்ததை பேச நினைப்பவரை எல்லாம், ஊடகத்தையும் ஊடகவியளாலர்களையும் விமர்சிக்க முடியாது. இது வலு பெறவும் கூடாது.

