முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையை தாக்கிய ஆழிப்பேரலை : 21ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது.

2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவுகளுக்கு அருகில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பாரிய சுனாமி அனர்த்தம் ஏற்பட்டது.

இதனால் இலங்கையில் 35,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், சுமார் 5,000 பேர் காணாமல் போன நிலையில் பெருமளவிலான சொத்துக்களும் அழிவடைந்தன.

தேசிய பாதுகாப்பு தினம்

அதற்கமைய, சுனாமி பேரழிவினால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், 2005 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26 ஆம் திகதியும் ‘தேசிய பாதுகாப்பு தினமாக’ பெயரிடப்பட்டுள்ளது.

இலங்கையை தாக்கிய ஆழிப்பேரலை : 21ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று | 21St Commemoration Of The Tsunami Disaster

சுனாமி பேரழிவு மற்றும் இதுவரை நாட்டில் இடம்பெற்ற பல்வேறு அனர்த்தங்கள் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், இம்முறையும் “தேசிய பாதுகாப்பு தின” நினைவுகூரல் நிகழ்வு இன்று (26) காலை 8.30 மணி முதல் காலை 11.00 மணி வரை காலி, பெராலிய சுனாமி நினைவுத் தூபிக்கு அருகில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் மாவட்ட ரீதியாகப் பல்வேறு சர்வ மத வழிபாட்டு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இரண்டு நிமிட மௌன அஞ்சலி

இதேவேளை, இந்த அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இன்று காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கையை தாக்கிய ஆழிப்பேரலை : 21ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று | 21St Commemoration Of The Tsunami Disaster

மேலும், பெராலிய பகுதியில் சுனாமி அலைகளுக்குள் சிக்கி விபத்துக்குள்ளான தொடருந்து துயரச் சம்பவத்தை நினைவுகூரும் வகையில், மருதானை தொடருந்து நிலையத்திலிருந்து இன்று காலை 6.30 மணிக்கு மாத்தறை நோக்கிய தொடருந்து ஒன்றை இயக்குவதற்கு அந்த திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.