கொழும்பு – மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்னிப்பிட்டியாவில் உள்ள ஒரு எரிபொருள் நிலையத்தில், ஊழியர் ஒருவரைத் தாக்கிய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜூன் 3 ஆம் திகதி பிற்பகலில் இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கோட்டை, மதிவெலவைச் சேர்ந்த 34 வயதான சந்தேக நபர், மிரிஹான பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில், சந்தேக நபர் கியூஆர் குறியீடு இல்லாமல் எரிபொருள் பெற முயன்றுள்ளார்.
எனினும் தேவையான கியூஆர் குறியீடு இல்லாமல் எரிபொருள் வழங்க முடியாது என்று எரிபொருள் நிலைய ஊழியர் தெரிவித்தபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், தாக்கப்பட்ட ஊழியர் இந்த விடயத்தை சுமூகமாகத் தீர்க்குமாறு பொலிஸாரிடம் கோரியதாகத் தெரிகிறது.
அதன்படி, சந்தேக நபருக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டு, இந்த விவகாரம் தீர்க்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட ஊழியர் இந்தப் புகாரைத் தொடர விரும்பவில்லை என்று பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

