பற்றாக்குறையை தவிர்க்கும் வகையில் மேற்கொள்ளப்படும் உப்பு இறக்குமதி மேலும்
தாமதமாகும் என்று உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு நிர்வாகப் பிரிவால் தேவையான
சான்றிதழ்களை வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள் காரணமாகவே இந்த நிலை
ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் உப்பு பற்றாக்குறை
எனவே, இந்த தாமதம் நாட்டின் உப்பு பற்றாக்குறையை மோசமாக்கும் என்று சங்கத்தின்
தலைவர் கனக அமரசிங்க எச்சரித்துள்ளார்.
இதேவேளை, உப்பு இறக்குமதி செய்வதற்கான காலக்கெடு, 2025 பெப்ரவரி 28 ஆம்
திகதியுடன் முடிவடைகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.