முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாக்கு நீரிணையை கடக்க முயன்றவருக்கு நேர்ந்த கதி

தலைமன்னார் (Mannar) முதல் தனுஷ்கோடி (Dhanushkodi) அரிச்சல்முனை வரை தொடர் ஓட்ட முறையில் நீந்தி
கடக்க முயன்ற பெங்களூருவைச் சேர்ந்த முதியவர் நடுக்கடலில் நெஞ்சு வலி காரணமாக
உயிரிழந்துள்ளார்.

இலங்கை தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை உள்ள 30 கிலோமீட்டர் தூரம் பாக்கு நீரிணை (Palk Strait) கடல் பகுதியை சமீப காலமாக வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த
பல நீச்சல் வீரர்கள் நீந்தி கடந்து சாதனை படைத்து வருகின்றனர்.

இந்நிலையில், தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல் முனை வரை நீந்தி
கடப்பதற்கு இந்தியா மற்றும் இலங்கை அரசிடம் உரிய அனுமதி பெற்று நேற்று (22)
31 பேர் கொண்ட குழு ராமேஸ்வரத்தில் இருந்து படகு மூலம் புறப்பட்டு தலைமன்னார் வந்தடைந்தனர்.

பரிசோதனை

அங்கிருந்து இன்று அதிகாலை சுமார் 12.10 மணி அளவில் கடலில் குதித்து
தொடர் ஓட்ட முறையில் நீந்த தொடங்கினர்.

man-who-tried-to-cross-the-palk-strait-died

அப்போது சரியாக மூன்று மணி அளவில் தொடர் ஓட்ட நீந்துதலில் மூன்றாவது இடத்தில்
இருந்த பெங்களூரை சேர்ந்த கோபால் ராவ் (78) என்பவருக்கு திடீரென நடுக்கடலில்
நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதனையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவக் குழு நெஞ்சு வலி காரணமாக கோபால் ராவ்
உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர்.

பொலிஸார் விசாரணை

இதனையடுத்து, கோபால் ராவ் உடலை தனுஷ்கோடி பாலம் மீன்பிடித் துறைமுகத்திற்கு
எடுத்து வந்த பின்னர் உடற்கூறு ஆய்வுக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில்
அனுமதித்தனர்.

man-who-tried-to-cross-the-palk-strait-died

உடன் வந்த நபர் ஒருவர் உயிரிழந்ததால் 30 பேரும் மன்னார் முதல் தனுஷ்கோடி
அரிச்சல் முனை வரை நீந்தி கடந்து சாதனை படைக்கும் நிகழ்வை கைவிட்டனர்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பாக ராமேஸ்வரம் நரைன் பொலிஸார் வழக்கு பதிவு
செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
Source: https://tamilwin.com/article/man-who-tried-to-cross-the-palk-strait-died-1713852985

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.