சாவகச்சேரி வைத்தியசாலையில் (Chavakachcheri Base Hospital) தற்பொழுது நியமனம் பெற்று கடமையில் இருக்கும் அதிகாரியே வைத்தியசாலையின் தற்போதைய பதில் வைத்திய அத்தியட்சகர் என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன (Ramesh Patirana) தெரிவித்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று (17.07.2024) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு பதிலளித்த போதே சுகாதார அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
அத்துடன், நாட்டின் சுகாதாரத்துறை சார்ந்த தவறான எண்ணக்கருக்களை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டாம் என்றும் சுகாதார அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அர்ச்சுனா முன்வைத்த குற்றசாட்டுகள்
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நான் பதவியேற்றதன் பின் வைத்தியர் அர்ச்சுனா முன்வைத்த குற்றசாட்டுகள் தொடர்பான எந்தவொரு பிரச்சினையும் இல்லையென வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை ஐபிசி தமிழுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “வைத்தியசாலையில் நடைபெறும் அணைத்து சம்பவங்கள் தொடர்பாக நான் தனி நபராக கவனித்துக்கொண்டு இருக்கின்றேன்.
அத்தோடு, வைத்தியசாலை அபிவிருத்தி பணிகளுக்கான நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது என பதில் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
https://www.youtube.com/embed/CRd7bvb9Y0M