‘இனி யாழ்ப்பாணம் (Jaffna) திரும்பி வரமாட்டேன்’ என்று கூறிவிட்டுப் புறப்பட்டுள்ளார் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா.
இனிமேல் யாழ்ப்பாணம் வரக்கூடாது என்று நிறைத்து யாழ்பாணத்தை விட்டு வெளியேறிய இரண்டாவது சந்தர்ப்பம் இது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு இதேபோன்ற நிர்வாகச் சீர்கேடு காரணமாக தான் வெளியேறியிருந்ததாகவும் அவர் சுட்டிக் காண்பித்துள்ளார்.
குறிப்பிட்ட சில அரசியல் தலைவர்களை ‘பொறுக்கிகள்’ என்று சாடியிருந்த வைத்தியர் அர்ச்சுனா, அடுத்த தேர்தலில் உண்மையுள்ள படித்த ஒரு இளைஞனைக் களமிறக்கி சில அரசியல் தலைவர்களைத் தான் தோற்கடிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மருத்துவ நிர்வாக துறையில் இருந்து பதவி விலகுவதாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா தனது சமூக வலைத்தள பதிவில் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/EwNU2QUYrwo