முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு – கைவிடப்பட்ட வேலைநிறுத்தம்

ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்படவிருந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த சங்கத்திற்கும், பிரதி அமைச்சரின் தனிப்பட்ட செயலாளருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், சம்பவம் குறித்து அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் விசாரணை நடத்தி தீர்மானமொன்றை வழங்குவதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்ப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று(10)  ரயில் சேவைகள் வழமை போல் இயங்கும் எனவும், பயணிகள் எவ்வித தடையுமின்றி பயணிக்க முடியும் எனவும் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், சரக்கு போக்குவரத்து ரயில் ஊழியர்கள் மாத்திரம் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

  தொழிற்சங்க நடவடிக்கை குறித்து ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் செயலாளர் ருக்மால் பண்டார மேலும் கருத்துத் தெரிவிக்கையில் குறிப்பிட்டதாவது:

ரயில்வே பாதுகாப்பு விதிகளை முற்றிலும் மீறி, ரயில்வே திணைக்களத்தின் பொதுச் சொத்துக்கள் மற்றும் பயணிகளின் உயிர்களைப் பாரிய ஆபத்துக்குள்ளாக்கும் வகையில் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

திணைக்களத்தின் விதிமுறைகளை எவ்விதத்திலும் பொருட்படுத்தாமல், ரயில்வே கிரேன் (Crany) வாகனங்கள் கடந்த சில நாட்களாக சட்டவிரோதமான முறையில் இயக்கப்பட்டுள்ளன.

இந்த ஆபத்தான நிலைமை மீண்டும் ஏற்படுவதற்கு இடமளிக்க வேண்டாம் என அதிகாரிகளுக்குக் கடந்த சில நாட்களாக நாங்கள் தொடர்ச்சியாக அறிவுறுத்தியிருந்தோம்.

ஆனால், எமது அந்த எச்சரிக்கை அறிவிப்பை முற்றாக அலட்சியப்படுத்திவிட்டு, மீண்டும் இரண்டு சந்தர்ப்பங்களில் அந்த வாகனங்கள் இயக்கப்பட்டுள்ளன.

அதிகாரிகளின் இந்த அலட்சியப் போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தியுமே இந்த வேலைநிறுத்தம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.  

Source: https://samugammedia.com/important-notice-for-train-passengers—abandoned-strike-1781057532

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.