சிறகடிக்க ஆசை
சீதா-அருண் பதிவு திருமணம் செய்துவைத்த மீனா மீது கடும் கோபத்தில் உள்ளார் முத்து.
இதனால் தனது மனைவியை வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டார், மீனாவும் தனது அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இன்றைய எபிசோடில் முத்து முதல் விஜயா வரை மீனா மீனா என கூப்பிடுகிறார்கள். பின் விஜயா, ரோஹினியை காபி கேட்க அவரும் போட்டுக் கொடுக்கிறார். இதெல்லாம் ஒரு காபியா, வீட்டில் இருந்த வேலைக்காரியிடம் கற்றுக்கொண்டிருக்க வேண்டும் என கூறுகிறார்.

தனது மனைவி மீனாவை தான் வேலைக்காரி என தனது அம்மா கூறுகிறார் என கோபத்தில் விஜயாவை Left Right வாங்குகிறார் முத்து, இதனால் அவர் செம ஷாக் ஆகிறார்.
புரொமோ
அடுத்த வாரத்திற்கான புரொமோவில், ரோஹினி வீட்டு வேலைக்கு ஒருவரை கூட்டி வருகிறார்.
அவர் சமைத்ததை சாப்பிட்டு குடும்பமே தவிக்கிறார்கள், விஜயா காரத்தில் துடிக்கிறார். பின் தனது மனைவி இல்லாமல் எவ்வளவு கஷ்டம், என்னவெல்லாம் பேசுனீர்கள் என விஜயா பார்த்து முத்து கேட்கிறார்.
இதோ புரொமோ,
View this post on Instagram

