ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொதுவேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு (P. Ariyanethran) கிழக்கு மாகாணத்தில் அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக அவர் இன்று (09.09.2024) கிழக்கிலுள்ள பகுதிகளுக்கு சென்றுள்ளார்.
மேள – தாள வாத்தியங்கள்
இதன்போது, மேள – தாள வாத்தியங்கள் முழங்கி அவருக்கு மக்கள் வரவேற்பளித்துள்ளனர்.
தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழ் சிவில் அமைப்புக்களும் இணைந்து தேர்தலில் களமிறக்கியுள்ள ஜனாதிபதி பொதுவேட்பாளருக்கு தமிழ் மக்களிடையே இவ்வாறான வரவேற்பு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.