அமெரிக்க(USA) ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) தேர்தலில் இருந்து விலகியமை தொடர்பாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau) தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளதாவது,
ஜஸ்டின் ட்ரூடோவின் பதிவு
‘நான் ஜனாதிபதி பைடனை பல ஆண்டுகளாக அறிவேன். அவர் ஒரு சிறந்த மனிதர். அவர் செய்யும் அனைத்தும் அவரது தேசத்தின் மீதான அன்பால் வழிநடத்தப்படுகிறது.

ஜனாதிபதியாக அவர் கனேடியர்களுக்கு ஒரு பங்குதாரர் மற்றும் ஒரு உண்மையான நண்பர். ஜனாதிபதி பைடன் மற்றும் முதல் பெண்மணிக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, ஜோ பைடன் தேர்தலிலிருந்து விலகியமை தொடர்ந்து
ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் களமிறங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
Source: https://ibctamil.com/article/biden-unprecedented-exit-us-election-trudeau-tweet-1721674636

