வாகரை (Vakarai) – கிருமிச்சை குளத்தில் மீன்பிடிக்க சென்ற நிலையில் காணாமல் போன மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலமானது, இன்று (07.07.2024) கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது.
கிருமிச்சை பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான யசோதரன்
புண்ணியராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தேடுதல் பணி
உயிரிழந்த நபர் வழமை போல நேற்று (06) அதிகாலை வீட்டில் இருந்து
கிருமிச்சை குளத்தில் மீன்பிடிப்பதற்காக சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, அவரை உறவினர்கள் தேடிச் சென்ற போது அவர் காணாமல்
போயுள்ளதுடன் குளத்தின் கரையில் அவருடைய தோணி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன்பின்னர், இயந்திர படகு மூலம் கடற்படையினர் குளத்தில் இன்று மேற்கொண்ட தேடுதலின் போது நீரில் மூழ்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக
வாழைச்சேனை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Source: https://tamilwin.com/article/a-fishermen-dead-body-found-in-vakarai-batti-1720344985

