முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான புதிய அறிவிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக மேல் மற்றும் தென் மாகாணங்களில் விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைகள் நாளை (16) திறக்கப்படும் என அந்தந்த மாகாணங்களின் செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மற்றும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களாகப் பயன்படுத்தப்பட்ட பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் தீர்மானிக்க மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக மேல் மற்றும் தென் மாகாணங்களிலுள்ள சில பாடசாலைகளுக்கு நேற்றும் (14) இன்றும் (15) விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

கொழும்பில் உள்ள பாடசாலைகள் 

அதன்படி, கம்பஹா (Gampaha) மற்றும் களனி கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளுக்கு நேற்றும் இன்றும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான புதிய அறிவிப்பு | Tommorrow School Holiday Announcement From Moe

அத்துடன் கொலன்னாவ மற்றும் கடுவலை கல்வி வலயத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் நேற்றும் இன்றும் மூடப்பட்டுள்ளன.

மேலும், கொழும்பு கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (15) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளம் மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்