முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பு தனியார் பேருந்து நிலையத்தில் ஹெரோயினுடன் பௌத்த பிக்கு கைது

கொழும்பு தனியார் பேருந்து நிலையத்தின் 04ஆவது நடைமேடைக்கு அருகிலுள்ள மலசலக்கூடப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஊழல் ஒழிப்பு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே குறித்த பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை சோதனையிட்டபோது, அவரது தோளில் தொங்கவிடப்பட்டிருந்த பயணப் பையில் ஒளிபுகும் பொலித்தீனால் பொதியப்பட்டு, காகிதத்தால் மூடப்பட்டிருந்த பொதி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அந்தப் பொதியை சோதனையிட்டபோது அதற்குள் போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பின்னர் சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட சான்றுப் பொருட்களையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மேற்கொள்ளப்பட்ட நிறுப்புச் சோதனையில், குறித்த பொதியில் 88,700 மில்லிகிராம் ஹெரோயின் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள பிக்கு புத்தளம் பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வருபவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரான பிக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Source: https://samugammedia.com/arrest-of-buddhist-monk-with-heroin-at-colombo-private-bus-station-1785134580

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்