கொழும்பு – புறக்கோட்டை, ஐந்துலாம்பு சந்தைப் பகுதியில் அமைந்துள்ள பிரபல இனிப்பு விற்பனையகம் ஒன்றின் மேல் மாடியில் இன்று திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இத்தீ விபத்து தொடர்பில் தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர், நான்கு தீயணைப்பு வாகனங்களைப் பயன்படுத்தி தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தத் தீ விபத்துக்கான காரணம் மற்றும் இதனால் ஏற்பட்டுள்ள சொத்துச் சேதங்கள் குறித்த மேலதிக விபரங்களை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

