தமிழ் பொதுவேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு (Ariyanethran) ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில் (Kilinochchi) இடம்பெற்ற பிரசார கூட்டத்திற்கு அதிகளவிலான மக்கள் வருகை தந்துள்ளனர்.
குறித்த பரப்புரை கூட்டமானது, இன்று (16.09.2024) இடம்பெற்றுள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் இணைந்து பா. அரியநேத்திரனை தமிழ் பொதுவேட்பாளராக களமிறக்கினர்.
பெருகும் ஆதரவு
செப்டெம்பர் 21ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் உட்பட பல்வேறு தரப்பினராலும் தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
அதேவேளை, சில தமிழ் கட்சிகள், அமைப்புக்கள் மற்றும் தமிழ் தலைவர்கள் பொதுவேட்பாளர் தெரிவுக்கு ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்றைய தினம் கிளிநொச்சியில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருகை தந்துள்ளமை பொதுவேட்பாளரை ஆதரிப்போர் மத்தியில் ஒரு நம்பிக்கையை நிலைநாட்டும் வகையில் உள்ளது.