முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையில் இரவு நேரங்களில் மருத்துவர்களின் பரிதாப நிலை – கவலையில் அநுர அரசு

இலங்கையில பல பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இரவு நேரங்களில் தமது வாகனங்களிலேயே உறங்குகின்றமை தொடர்பில் தெரிய வந்துள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தங்குமிடப் பிரச்சினைகள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சில மருத்துவர்கள் அவ்வாறு செயற்படுவது தொடர்பில் தனக்கும் தகவல்கள் கிடைத்துள்ளதாக  சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் முன்னுரிமை

இதுவொரு கவலையான நிலைமை என அவர் சுட்டிக்காட்டினார். மருத்துவர்களுக்கான விடுதி மற்றும் போக்குவரத்துப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கி வேலைத்திட்டமொன்றைச் செயற்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இரவு நேரங்களில் மருத்துவர்களின் பரிதாப நிலை - கவலையில் அநுர அரசு | Doctors Sleeping The Vehicles

வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள சில யோசனைகள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

அனைத்து மருத்துவர்களும் சேவையாற்றுவதற்கு பொருத்தமான சுற்றுச்சூழலை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் எனவும் ஹன்சக விஜேமுனி மேலும் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சு

இதேவேளை கடந்த ஐந்து ஆண்டுகளில் 3,791 விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் இரவு நேரங்களில் மருத்துவர்களின் பரிதாப நிலை - கவலையில் அநுர அரசு | Doctors Sleeping The Vehicles

இது தவிர, 1,491 மருத்துவர்கள் சம்பளமற்ற விடுப்பில் இருப்பதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Source: https://tamilwin.com/article/doctors-sleeping-the-vehicles-1786169153

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்