யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியில் வேகமாகச் சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாள்ளத்துற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இன்று (22) மதியம் இடம்பெற்றுள்ளது.
அராலிச் சந்தியை அண்மித்த பகுதியில் இருந்து யாழ் நோக்கி சென்ற குறித்த காரே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான குறித்த கார் யாழ் வேலணைப் பகுதியை நோக்கி புதிதாக கட்டமைக்கப்பட்டுவரும் அதி உயர் மின் கம்பத்தில் மோதி பலத்த சேதங்களுக்குள்ளான நிலையில் பொலிசாரின் விசாரணையை அடுத்து பாரம் தூக்கியின் உதவியுடன் வெளியே எடுக்கப்பட்டிருந்தது.
எனினும் குறித்த விபத்தின் போது எவருக்கும் பாரதூரமான விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரியவருவதுடன் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை தூக்கமே விபத்துக்கு காரணம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Source: https://samugammedia.com/accident-in-a-sleepy-accident-in-kayts-1787400108

