இலங்கை மத்திய வங்கியினால் இன்று (06.07.2026) வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதத் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை குறைந்துள்ளது.
அதன்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ. 339.88 ஆக பதிவாகியுள்ளது.
வெளிநாட்டு நாணயச்சந்தை
கடந்த வெள்ளிக்கிழமை (03) அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 340.44 ஆக காணப்பட்டது.

வெளிநாட்டு நாணய சந்தையின் நகர்வுகள் மற்றும் பொருளாதார காரணிகளுக்கு அமைவாக நாணய மாற்று விகிதங்களில் தினசரி மாற்றங்கள் ஏற்படக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 376.23ஆகவும் விற்பனைப் பெறுமதி 389.85ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231.19ஆகவும் விற்பனைப் பெறுமதி 240.20ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 226.36ஆகவும் விற்பனைப் பெறுமதி 237.78ஆகவும் பதிவாகியுள்ளது.
Source: https://tamilwin.com/article/us-dollar-selling-price-falls-1783322353

