முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அதிகாரிகளும் காரணம்! மத்திய வங்கி ஆளுனர் குற்றச்சாட்டு

இலங்கை கடந்த காலத்தில் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு அரசியல்வாதிகள் மட்டுமன்றி, அதிகாரிகளும் கூட ஒருவகையில் காரணம் என்றும் மத்திய வங்கியின் கலாநிதி ஆளுனர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க, இலங்கையின் பொருளாதாரத் திவால்நிலையின் மூலக் காரணங்கள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள நிர்வாக பலவீனங்கள் குறித்து இணையத்தள நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பல்வேறு விடயங்களை தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி

குறித்த கலந்துரையாடலில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

தாம் பதவியேற்றபோது, ​​நாட்டின் நிதி நிலைமை குறித்த உண்மையான தகவல்கள் அப்போதைய ஜனாதிபதியிடமிருந்து கூட மறைக்கப்பட்டிருந்ததாகச் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அதிகாரிகளும் காரணம்! மத்திய வங்கி ஆளுனர் குற்றச்சாட்டு | Officials Responsible Sri Lanka S Economic Crisis

2022 ஏப்ரல் 8 அன்று மத்திய வங்கியின் ஆளுநராகத் தாம் பதவியேற்றபோது, ​​நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு 25 மில்லியன் அமெரிக்க டொலர் என்ற மிகக் குறைந்த நிலைக்குச் சரிந்திருந்ததை அவர் நினைவு கூர்ந்தார்.

 6 பில்லியன் டொலர் 

இருப்பினும், அதற்கடுத்த மாதத்தில் மட்டும் 6 பில்லியன் டொலர் கடன் தவணைகள் செலுத்தப்பட வேண்டியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘முந்தைய மத்திய வங்கி ஆளுநர்களும் நிதி அமைச்சர்களும் நாட்டின் உண்மையான நிலையை ஜனாதிபதிக்கோ அல்லது நாடாளுமன்றத்திற்கோ தெரிவிக்கவில்லை. கடன்களை எந்தப் பிரச்சினையுமின்றி செலுத்திவிட முடியும் என்று அவர்கள் கூறிக்கொண்டிருந்தனர்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அதிகாரிகளும் காரணம்! மத்திய வங்கி ஆளுனர் குற்றச்சாட்டு | Officials Responsible Sri Lanka S Economic Crisis

ஆனால், உண்மையான நிதிநிலை மறைக்கப்பட்டதால் நாட்டின் பொருளாதாரம் கடுமையான ஆபத்தில் இருந்தது’ என்று ஆளுநர் கூறினார்.

கடன் செலுத்துதலைத் தற்காலிகமாக நிறுத்திவைத்த தனது முடிவு குறித்த எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அவர், நாடு முழுமையாகச் சரிந்துவிடுவதைத் தடுப்பதற்கு அதுவே ஒரே வழியாக இருந்தது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய வங்கி ஆளுனர்

‘கடன் வழங்குநர்களுக்குத் தெரிவித்த பின்னரே நாங்கள் இந்த முடிவை எடுத்தோம். நாங்கள் அவ்வாறு செய்யாமல் இருந்திருந்தால், நாடு ‘கடுமையான கடன்செலுத்தத் தவறிய’ (Hard Default) நிலைக்குள் வீழ்ந்து, சர்வதேச நிதி அமைப்பிலிருந்து முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அதிகாரிகளும் காரணம்! மத்திய வங்கி ஆளுனர் குற்றச்சாட்டு | Officials Responsible Sri Lanka S Economic Crisis

அமைச்சரவையின் ஒப்புதலுடனும், நாடாளுமன்றத்திற்குத் தெரிவித்தும் அந்த முடிவு எடுக்கப்பட்டது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய அதிகாரிகள் உண்மையை மறைத்து, கடனை அடைக்க முயன்றதன் மூலம் அத்தியாவசிய உணவு மற்றும் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான நாட்டின் நிதிகளை அழித்துவிட்டனர் என்று சுட்டிக்காட்டிய கலாநிதி நந்தலால் வீரசிங்க, அந்தத் தவறுகளைத் திருத்திக்கொண்டு வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டதாலேயே நாடு இன்று ஒரு குறிப்பிட்ட அளவிலான ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Source: https://tamilwin.com/article/officials-responsible-sri-lanka-s-economic-crisis-1783259302

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.