நீதிமன்ற உத்தரவு மற்றும் பயணத் தடை இருந்தபோதிலும், முன்னாள் பொலிஸ் மா
அதிபர் தேசபந்து தென்னகோனை (Deshabandu Tennakoon), பொலிஸார் இன்னும் தேடி வருகின்றனர்.
ஏற்கனவே சுமார் 5 வீடுகளிலும் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
எனினும் அவர் இன்னும் தலைமறைவாகிய நிலையில் இருந்து வருகிறார்.
வெளிநாட்டுப் பயணத் தடை
2023, டிசம்பர் 31, அன்று மாத்தறை வெலிகமவில் உள்ள பெலேன பகுதியில் உள்ள ஒரு
விருந்தகத்துக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக,
கொழும்பு குற்றப் பிரிவின் ஏழு அதிகாரிகளுடன் சேர்ந்து, அவரைக் கைது செய்ய
மாத்தறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து, குற்றப் புலனாய்வுத் துறையின் வேண்டுகோளைத் தொடர்ந்து,
தென்னகோனுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் இலங்கையின்
36வது பொலிஸ் அதிபராக தென்னகோன் நியமிக்கப்பட்டார்.