உள்ளூராட்சி மன்ற வாரத்தை முன்னிட்டு தம்பலாகாமம் பிரதேச சபை மற்றும் தம்பலாகாமம் பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நடைபவணி இன்று (17)இடம் பெற்றன.”வளமான நாடு அழகான வாழ்வு” புத்துயிர்க்கும் புதுநகரம் என்ற தொனிப்பொருளில் இடம் பெற்ற நடைபவணியானது தம்பலாகாமம் பிரதேச சபை வளாகத்தில் இருந்து ஆரம்பித்து திருகோணமலை கண்டி பிரதான வீதியின் 97ம் கட்டை வரை சென்றது.
இதன் போது வீதியில் இரு மருங்கிளும் உள்ள குப்பை பொலித்தீன் உள்ளிட்ட பொருட்கள் சுத்தம் செய்யப்பட்டன.
இதில் தம்பலாகாமம் பிரதேச சபை தவிசாளர் எச்.தாலிப் அலி, தம்பலாகாமம் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் ,உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் ,பிரதேச சபை செயலாளர் டுகெதர்,பிரதேச சபை உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினர் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த உள்ளூராட்சி மன்ற வாரமானது செப்டம்பர் 14-19 வரை அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் சுத்தம் செய்யும் நடைபவணி
உள்ளூராட்சி மன்றத் வாரத்தின் ஒரு பகுதியாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தூய்மையான சமூகத்தை உருவாக்கும் நோக்கில் தம்பலாகாமம் பிரதேச சபை மற்றும் தம்பலாகாமம் பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த சுத்தம் செய்யும் நடைபவணி இடம் பெற்றன.
நடைபவணியின் போது பொதுமக்களுக்கு தூய்மையான சுற்றுச்சூழலின் அவசியம் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், வீதியோரங்கள் மற்றும் பொது இடங்களில் காணப்பட்ட குப்பைகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டன.
சுற்றுச்சூழலை பாதுகாப்பது ஒவ்வொருவரினதும் பொறுப்பு என்பதனை வலியுறுத்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்திருந்ததுடன், தம்பலாகாமம் பிரதேசத்தை தூய்மையாக மாற்றி சுகாதாரமான பிரதேசமாக பேணுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

