முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திலீபன் வெண்கலச் சிலை மற்றும் எல்.டீ.டீ.ஈ ஆதரவு செயற்பாடுகளை தடுக்க வேண்டும்! ‘சிங்ஹல ராவய’ அமைப்பு கொந்தளிப்பு

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கல்முனையைச் சேர்ந்த தமிழ் இளைஞரின் மரண தண்டனையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறும், யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள திலீபனின் வெண்கலச் சிலை மற்றும் எல்.டீ.டீ.ஈ (LTTE) அமைப்பை ஊக்குவிக்கும் செயற்பாடுகளைத் தடுக்குமாறும் ‘சிங்ஹல ராவய’ தேசிய அமைப்பு   வலியுறுத்தியுள்ளது. 

இன்று நடைபெற்ற ஊடக   சந்திப்பில் உரையாற்றிய ‘சிங்ஹல ராவய’ தேசிய அமைப்பின் தலைவரான வணக்கத்திற்குரிய அக்மீமன தயாரத்ன தேரர்,

மனிதநேய அடிப்படையில் குறித்த இளைஞருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையைத் தளர்த்துவதற்குத் தேவையான இராஜதந்திர தலையீடுகளை இலங்கை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அத்துடன், யாழ்ப்பாணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் திலீபனின் உருவத்தை வெண்கலச் சிலையாக வடித்துள்ளமை குறித்தும், எல்.டீ.டீ.ஈ அமைப்பை மீண்டும் ஊக்குவிக்கும் வகையிலான செயற்பாடுகள் குறித்தும் தேரர் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தார். 

நாட்டின்  சட்டத்தையும் அமைதியையும் சீர்குலைக்கும் வகையில் இவ்வாறான பிரசாரங்கள் இடம்பெறுவதை உடனடியாகத் தடுப்பதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை குறித்த இளைஞரின் மரண தண்டனையைக் குறைப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஜனாதிபதி மற்றும் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என ‘புலம் பெயர் வீட்டுப் பணிப்பெண்களின் உள்நாட்டு குரல்’ அமைப்பு வலியுறுத்தியுள்ளது. 

குறித்த அமைப்பு நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், அதன் அழைப்பாளர் உமா கரந்தகொல்ல கருத்துத் தெரிவிக்கையிலேயே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 

அவர் நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களிப்பு செய்த ஒரு உழைப்பாளி என்றும், ஒரு இளம் உயிரைப் பாதுகாப்பது மிக முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Source: https://samugammedia.com/dileepans-bronze-statue-and-ltte-support-activities-must-be-stopped-sinhala-ravaya-group-is-upset-1789901569

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.