முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழர் பிரதேசத்தில் கொடூரமாக தாக்கப்பட்ட காவல்துறை அதிகாரி : 7 பேர் கைது

அம்பாறையில் விசாரணை மேற்கொண்டிருந்த காவல்துறை அதிகாரியை குழுவாக இணைந்து தாக்கிய சந்தேக நபர்களை பெரியநீலாவணை காவல்துறை கைது செய்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (27) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை காவல் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியில் இடம்பெற்ற இரு சாரார் முறுகல் தொடர்பில் நேற்று (27) விசாரணை மேற்கொண்டிருந்த அதிகாரி மீது குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்ததாக்குதலினால் நிலைகுலைந்த குறித்த காவல் அதிகாரி காயமடைந்த நிலையில் மருதமுனை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காவல்துறை விசாரணை

பெரியநீலாவணை காவல் நிலைய பல்வேறு குற்றத்தடுப்பு பிரிவில் கடந்த வியாழக்கிழமை 26 ஆம் திகதி முறைப்பாடு ஒன்று வழங்கப்பட்டிருந்தது.

வழமை போன்று அம்முறைப்பாட்டை ஆராய இரு தரப்பினரை வரவழைத்த காவல்துறை விசாரணை விடயங்களை ஆராய்ந்து கொண்டிருந்தார்.

தமிழர் பிரதேசத்தில் கொடூரமாக தாக்கப்பட்ட காவல்துறை அதிகாரி : 7 பேர் கைது | 7 Arrested Assaulting Police During Interrogation

குறித்த விசாரணை காவல் அதிகாரி முன்னிலையில் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது முறைப்பாட்டாளர் பக்கமாக நின்ற பெண் திடிரென தனது செருப்பினை கழற்றி மறுமுனையில் இருந்த எதிராளியை நோக்கி பல முறை தாக்கியுள்ளார்.

இதன் போது உடனடியாக செயற்பட்ட அக்காவல் அதிகாரி குறித்த தாக்குதலை நிறுத்துமாறு கோரி சமரசப்படுத்த முயற்சித்துள்ளார்.

காவல்துறை நடவடிக்கை

இந்தநிலையில், காவல் அதிகாரியை திடிரென குழுவாக இணைந்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணைக்காக அழைக்கப்பட்டவர்கள் தாக்கியுள்ளனர்.

இதன் போது சற்றும் எதிர்பார்க்காத குறித்த காவல் அதிகாரி காயமடைந்த நிலையில் அருகில் உள்ள மருதமுனை பிரதேச வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழர் பிரதேசத்தில் கொடூரமாக தாக்கப்பட்ட காவல்துறை அதிகாரி : 7 பேர் கைது | 7 Arrested Assaulting Police During Interrogation

அத்தோடு, இத்தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் பெண் மற்றும் ஆண் சந்தேக நபர்கள் 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்

இச்சம்பவம் தொடர்பில் கடமைக்கு இடையூறு செய்தமை சமாதானத்திற்கு குந்தகம் விளைவித்தமை வன்முறையை தூண்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் எஞ்சிய சந்தேக நபர்களை கைது செய்ய பெரிய நீலாவணை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பிலான பூரண விசாரணைகளை கல்முனை பிராந்திய உதவி காவல்துறை அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

you may like this…!

https://www.youtube.com/embed/OiLP-AtXoKs

Source: https://ibctamil.com/article/7-arrested-assaulting-police-during-interrogation-1735367047?itm_source=parsely-popular

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.