முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாதிக்கப்பட்டுள்ள புலனாய்வுத்துறை: எச்சரிக்கும் முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

நாட்டின் பாதுகாப்பு அரண்களை அகற்றுவதாக இருந்தால் நாட்டின் புலனாய்வுத்துறை பலப்படுத்த வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் (Pramitha Bandara Tennakone) தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரத்துக்கு வந்ததுடன் நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பல வருட காலமாக மூடப்பட்டிருந்த வீதிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பு

பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த அரண்கள் அகற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு உறுதியாகி இருக்கின்றது என அரசு சிறுபிள்ளைத்தனமாக நினைத்துவிடக்கூடாது.

தேசிய பாதுகாப்பு என்பது மிகவும் விஸ்தீரமானதாகும்.

பாதிக்கப்பட்டுள்ள புலனாய்வுத்துறை: எச்சரிக்கும் முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் | New Government To Strengthen Intelligence Agency

அதனால் பாதுகாப்பு கருதி மூடப்பட்டிருந்த வீதிகளை மீண்டும் திறப்பதாக இருந்தால் எமது புலனாய்வுத்துறையைப் பலப்படுத்த வேண்டும்.

அவர்களின் மனநிலையை உயர்ந்த மட்டத்தில் வைக்க வேண்டும். ஆனால், எமக்குக் கிடைத்த தகவலுக்கமைய எமது புலனாய்வுத்துறையினரின் மனநிலை வீழ்ச்சியடைந்திருக்கின்றது.

புலனாய்வு பிரிவு

அவர்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

புலனாய்வு பிரிவின் பிரதானி ஜெனரல் சுரேஸ் சலேயை அந்த பதவியில் இருந்து உடனடியாக நீக்கி இருப்பது குறித்து நாங்கள் ஆச்சரியமடைகிறோம்.

பாதிக்கப்பட்டுள்ள புலனாய்வுத்துறை: எச்சரிக்கும் முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் | New Government To Strengthen Intelligence Agency

முக்கியமான பதவியில் இருக்கும் ஒருவரை அவ்வாறு திடீரென நீக்கக்கூடாது என்பதே எமது நிலைப்பாடு. அவருடன் தனிப்பட்ட பிரச்சினைகள் இருந்தாலும், அவருக்கு அடுத்தபடியாக அந்த பதவிக்கு வர இருப்பவருக்கு.

அவரின் அனுபவங்களை பெற்றுக்கொள்ள சிறிதுகாலம் அந்த பதவியில் அவரை வைத்திருக்க வேண்டும். அவ்வாறு செயற்பட்டிருந்தால், அறுகம்பே சம்பந்தமான நிலை ஏற்பட்டிருக்காது.

தனிப்பட்ட விடயங்களுக்காக நாட்டின் பாதுகாப்பை பலவீனப்படுத்த வேண்டாம் என அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

Source: https://ibctamil.com/article/new-government-to-strengthen-intelligence-agency-1730159973

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.