யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு சட்டவிரோதமான முறையில் கண்டகற்களை ஏற்றிச்சென்ற பாரவூர்தியை வழிமறித்து நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.
சாவகச்சேரி – நுணாவில் பகுதியில் நேற்று (02.01.2025) இரவு 10.15 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ”அண்மைய நாட்களில் யாழ்ப்பாணம் – மந்துவில் பிரதேசத்தில்
இருந்து இருந்து பாரவூர்தியில் சட்டவிரோதமான முறையில் கண்டகற்களை அகழ்ந்து செல்வதாக பிரதேச மக்களால் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
சோதனையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது நேற்று (02.01.2025) இரவு 10.15 மணியளவில் நுணாவில் பகுதியில் வைத்து குறித்தபாரவூர்தியை மறித்து சோதனையிட்ட போது அனுமதிப்பத்திரம் இன்றி கற்கள் ஏற்றிச்சென்றமை தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த பாரவூர்தி சாவகச்சேரி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்தார்.
இதேவேளை குறித்த விடயம் குறித்து குற்றஞ்சாட்டப்பட்ட தரப்பினர் இதற்கான அனுமதி பெறப்பட்ட பின்னரே யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்கு கற்கள் கொண்டு செல்லப்படுவதாக தெரிவித்தனர்.
மேலும் இந்த விடயம் குறித்து தாங்களும் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும், தேவையான ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/xTa5IHFdeHU