முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் களவாடப்பட்ட பெருந்தொகை நகைகள்: ஒருவர் கைது

யாழில், பெறுமதி மிக்க நகைகள் மற்றும் கைத்தொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (14) ஊர்காவற்றுறை நாரந்தனைப் பகுதியில்
இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வழமைபோன்று பகல் கொஸ்தாபசு ஹரிதாஸ்
தலைமையிலான ஊர்காவற்றுறை காவல்துறை அணியினர் நாரந்தனை பகுதியில் வீதி கண்காணிப்பு நடவக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

பெறுமதிமிக்க நகைகள்

இதன்போது, வீதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் ஒருவர் நடமாடியதை அவதானித்த நிலையில்,
அவரை மறித்து சோதித்த போது அவரது காற்சட்டை பொக்கற்றில் தாலிக்கொடி, சங்கிலி,
மோதிரங்கள் மற்றும் பென்ரன்கள் இருந்ததை அவர்கள் அவதானித்துள்ளனர்.

யாழில் களவாடப்பட்ட பெருந்தொகை நகைகள்: ஒருவர் கைது | Large Amount Of Valuable Jewelry Stolen In Jaffna

இதையடுத்து அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டபோது அவை சுன்னாகம் பகுதியில்
களவாடப்பட்ட பெறுமதிமிக்க நகைகள் என தெரியவந்துள்ளது.

இதையடுத்து குறித்த சந்தேக நபரின் வீட்டுக்கு சென்று சோதனைகளை மேற்கொண்டபோது
அங்கு பல நவீன கைத்தொலைபேசிகள், ஒருதொகைப் பணம் இலத்திரனியல் சாதனங்கள்
உள்ளிட்ட பல பொருட்களையும் கைப்பற்றியுள்ளதாக ஊர்காவற்றுறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சுன்னாகம் காவல்துறை

அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை காவல்துறையினர், சுன்னாகம்
காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதை அடுத்து குறித்த சந்தேக நபரையும் மீட்கப்பட்ட
பொறுமதிமிக்க பொருட்களையும் சுன்னாகம் காவல்துறையினரிடம் ஊர்காவற்றுறை காவல்துறையினர்
கையளித்துள்ளனர்.

இதையடுத்து அதனை சுன்னாகம் காவல்துறையினரை் தமது காவல் நிலையத்துக்கு
கொண்டுசென்றுள்ளனர்.

யாழில் களவாடப்பட்ட பெருந்தொகை நகைகள்: ஒருவர் கைது | Large Amount Of Valuable Jewelry Stolen In Jaffna

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வரும்
நிலையில் குறித்த நகைகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டதை அடுத்து திருட்டுக்
சம்பவங்களுடன் தொடர்புடைய விசாரணைகளில் காவல்துறையினர் தீவிரம் காட்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
எடுத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் மாலை திருவிழா

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.