இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு இலங்கையில் அனுமதிக்கப்பட்ட பொதி பொய்யும் நடைமுறைகளை போணாததால் அவற்றை பாவிக்கும் போது அவதானம் தேவையென உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் இன்று(14.08.2025) நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
“எமது நாட்டில் ஒரு வருடத்திற்கு 185000 மெற்றிக் தொன் உப்பு பயன்படுத்தப்படுகிறது.
இறக்குமதி செய்யப்படும் உப்பு
அதேபோல் மாதத்திற்கு 15000 மெற்றிக் தொன் தேவையாகும். இலங்கையில் பாவனைக்கு ஏற்ப உப்பு உற்பத்தி செய்யப்படுவது குறைவடைந்தாலேயே வெளிநாட்டில் இருந்து உப்பு இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

அவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட 11,000 மெற்றிக் தொன் உப்பு துறைமுகத்தில் முடங்கி கிடப்பதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் உப்பு உற்பத்தியாளர்கள் பெரும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் உப்பின் தட்டுப்பாடு அதிகரித்ததோடு வெசாக் விடுமுறையும் வந்ததால் இறக்குமதி கட்டுப்பாடுகளை அரசாங்கம் தளர்த்தியது. எந்த நிறுவனமும் சுகாதார அமைச்சில் பதிவு செய்து உப்பு இறக்குமதி செய்யலாம் என்ற நிலை உருவாக்கப்பட்டது.
இறக்குமதி கட்டணம்
அதை பயன்படுத்திய வியாபாரிகள் பொதி செய்யப்பட்ட உப்பை இறக்குமதி செய்தனர்.
இந்த பொதியிடலில் எவ்வித நடைமுறைகளும் பேணப்படவில்லை.

பொதியிட்ட திகதி மற்றும் காலாவதியாகும் திகதி, இரு மொழிப் பயன்பாடு மற்றும் விலை ஆகியன குறிப்பிடப்படாமல் சந்தையில் விற்கப்படுகின்றன. அவற்றுக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இறக்குமதி செய்யப்படும் உப்புக்கு வரி அறவிடப்படுவதில்லை. இறக்குமதி கட்டணமே செலுத்த வேண்டும். அத்தோடு பொதி செய்யப்பட்ட உப்புக்கு எந்தவிதமான கட்டணங்களும் இல்லை. இவற்றுக்கு அரசே தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளனர்.

