முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இன்று தேரேறி வந்தார் வல்லிபுரம் ஆழ்வார்

யாழ்ப்பாணம், வடமராட்சிப் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ வல்லிபுரம் ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று மிக விமரிசையாகவும் பக்திபூர்வமாகவும் நடைபெற்றது.

யாழ்ப்பாணத்தின் புகழ்பெற்ற ஆன்மீகத் தலங்களில் ஒன்றான வல்லிபுரம் ஆழ்வார் ஆலயத்தின் மகோற்சவப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா இன்று  காலை 8 மணிக்கு ஆரம்பமானது.

இலங்கையின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேர்த் விழாவில் கலந்துகொள்வதற்காக வடமராட்சியில் குவிந்தனர்.

அரோகரா முழக்கங்கள் மற்றும் பக்திப் பாடல்கள் ஒலிக்க, விசேடமாக அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் வல்லிபுரம் ஆழ்வார் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்து அருள் பாலித்தார்.

ஆலயத்தின் வீதிகளில் பக்திப் பரவசத்துடன் ஏராளமான பக்தர்கள் அங்கப்பிரதிஷ்டை செய்தும், பல்வேறு காவடிகளைத் தாங்கியும் தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி ஆழ்வாரின் அருளைப் பெற்றுக்கொண்டனர்.

பக்தர்களின் வசதிக்காகவும் பாதுகாப்புக்காகவும் ஆலய நிர்வாகத்தினரும் தொண்டர் குழுவினரும் உரிய ஏற்பாடுகளைச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Source: https://samugammedia.com/tens-of-thousands-of-devotees-got-together-today-as-vallipuram-azhwar-came-on-the-chariot-1790326032

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்